உங்கள் முடி மிகவும் மெலிதாக உள்ளதா? இதை ட்ரை பண்ணுங்க !தலை முடி இரண்டு மடங்கு அடர்த்தியாக வளரும் !fenugreek paste hair pack
உங்கள் முடி மிகவும் மெலிதாக உள்ளதா? இதை ட்ரை பண்ணுங்க !தலை முடி இரண்டு மடங்கு அடர்த்தியாக வளரும் !
பெண்கள் அனைவரும் விரும்புவது கருமையான மற்றும் அடர்த்தியான தலை முடி வேண்டும் என்பதே ஆகும். ஆனால் பல பெண்களுக்கு இது கிடைப்பது இல்லை, மிகவும் மெலிதான வால் போன்ற முடியே அதிகமான பெண்களுக்கு இருக்கிது.இதனால் , பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளக்கப்படுகின்றனர் மேலும் அவர்கள் பலவிதமான ஷாம்பு பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்காது.பெண்களுக்கு இருக்கும் இந்த பிரச்சனைக்கு நாம் முன்னோர்கள் பயன்படுத்திய பல வழிமுறைகள் உள்ளன.அவற்றில் ஒன்றினை இன்று பார்ப்போம்.

இன்று நாம் பார்க்க போவது மிகவும் அற்புதமான ஒரு ஹேர்பக்.இந்த hairpack ஒரு மாஜிக் உள்ளது. என்னவென்றால் இது தலைமுடியினை வளர செய்வதுடன், மெலிதாக இருக்கும் நம் முடியினை கூட அடர்த்தியானது போல தோற்றத்தினை உருவாக்குகிறது.இப்போது இந்த ஹேர்பக் செய்வதற்கு தேவையான பொருள்களை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
இந்த hairpack செய்வதற்கு நாம் வீட்டிலையே பயன்படுத்தும் இரண்டு பொருட்களே போதும் அவை,
- வெந்தய பொடி
- புளிச்ச தயிர்
செய்முறை
இந்த hairpack செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் மூன்றில் இருந்து நான்கு ஸ்பூன் அளவிற்கு வெந்தய பொடியினை எடுத்து கொள்ளவேண்டும்.இதில் உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்றவாறு வெந்தய பொடியினை எடுத்து கொள்ளவேண்டும். பிறகு , நன்கு புளித்த தயிரினை அதில் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.இந்த இரண்டு கலவையையும் நன்கு கலந்து ஒரு கால்மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும்.
அப்ளை செய்யும் முறை
இப்பொழுது, தலைமுடியில் கொஞ்சமாக தேங்காய் எண்ணையை முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனி வரை நன்கு படும் படி அப்ளை செய்து கொள்ள வேண்டும். இப்போது இந்த வெந்தய பொடி கலவையை முடியின் வேர்க்கால்களில் நன்கு படும்படி அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு தலை முழுவதும் நன்கு அப்ளை செய்து, முடியின் நுனி வரைக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.இந்த கலவைக்கு பயன்படுத்த படும் தயாரானது, புளிச்ச தன்மையில் இருந்தால் மிகவும் .நல்லது. இவற்றை ஒரு அரைமணி நேரம் அப்படியே விட்டு விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரினை கொண்டு தலையினை அலச வேண்டும்.
பயன்கள்
இந்த வெந்தயத்தில் அதிக அளவில் ஐயன் மற்றும் ப்ரோடீன் சத்துக்கள் இருப்பதால் இது முடியினை வேரிலிருந்தே வலிமையாக வளர செய்கிறது. மேலும் முடியின் வேர்க்கால்களில் இரத்த ஓட்டத்தினை அதிக படுத்தி முடியினை வலிமையாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.
மேலும் இந்த வெந்தையம் மற்றும் புளிச்ச தயிர் கலவையானது, தலை முடிக்கு antiinflametry மற்றும் antifungi போன்று செயல் படுகிறது.இதனால் , இது தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளில் இருந்து நமது தலைமுடியினை பாதுகாக்கிறது.
இந்த கலவை மேலும் நமது முடியின் வேர்க்கால்களில் ஏற்படும் பலவிதமான infection மற்றும் தலைமுடியின் வறட்சி தன்மையை போக்குகிறது. எனவே, அனைவரும் வாரம் இரண்டு முடை இந்த ஹேர்பக் பயன்படுத்துங்கள், கண்டிப்பாக முடியின் அடர்தித்தன்மை அதிகப்படுத்துகிறது.
Comments
Post a Comment