உங்கள் முடி மூன்று மடங்கு அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ! வெந்ததைய பேஸ்டினை இவ்வாறு ட்ரை பண்ணுங்க! ( feenugreek with rice kanji paste)
உங்கள் முடி மூன்று மடங்கு அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ! வெந்ததைய பேஸ்டினை இவ்வாறு ட்ரை பண்ணுங்க!
பெண்கள் அனைவரும் பொதுவாக விரும்புவது நீண்ட அழகான அடர்த்தியான கூந்தலே ஆகும். ஆனால் , அனைவர்க்கும் இது கிடைப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மற்றும் மோசமான உணவு பழக்கதின் காரணத்தினாலே பெண்கள் அனைவர்க்கும் அதிக அளவில் முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை இயற்கையான முறையில் எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம். இந்த முறையானது நமது முனோர்கள் பயன்படுத்திய ஒரு அற்புதமான ஆயுர்வேதிக் முறை ஆகும். இதனை ஆண்கள் பெண்கள் என அனைவரும் பயன்படுத்தலாம். இந்த ஹேர் பக்கினால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லை.
இனி இந்த ஹேர் பாக்கினை எவ்வாறு தயார் செய்வது மற்றும் தேவையான பொருள்கள் அனைத்தையும் பார்ப்போம். இவை முற்றிலும் இயற்கையான முறையே ஆகும்.
தேவையான பொருள்
இந்த ஆயுர்வேதிக் குணம் நிறைந்த இந்த ஹேர் பாக்கினை தயார் செய்வதற்கு தேவையான பொருள்கள் மிகவும் குறைவான பொருள்களே, ஆகும், அதுவும் இவை நாம் அன்றாடம் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் சாதாரண பொருட்களே ஆகும். அவை ,
- அரிசி கஞ்சி
- வெந்தையம்
- கருவேப்பிலை
தயாரிக்கும் முறை
முதலில், இந்த பேஸ்ட் தயார் செய்வதற்கு, இரவில் சாதம் வடித்த கஞ்சியிலே இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் வெந்தையத்தினை இரவே, கஞ்சியிலே இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு மறுநாள் காலையில் கஞ்சியுடனே ஒரு கை பிடி அளவுக்கு கருவேப்பிலையினையும் சேர்த்து நன்கு பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளவேண்டும். பிறகு அரைத்த கலவையை தலை முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
பிறகு , அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரினை கொண்டு முடியினை நன்கு அலச வேண்டும். இவ்வாறு, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரும் பொழுது உங்களது முடி கொட்டுதல் முற்றிலுமாக நின்று முடியின் வளர்ச்சி இரண்டு மடங்கு அடர்த்தியாக வளரும்.எனவே , இவற்றை அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
Comments
Post a Comment