உங்களின் தலைமுடி வேகமாக வளர்வதற்கு இந்த ஹேர் ஆயில் போதும் ! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க! (Garlic hair oil )
உங்களின் தலைமுடி வேகமாக வளர்வதற்கு இந்த ஹேர் ஆயில் போதும் ! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!
பெண்கள் அனைவருக்கும் , அனைத்து பருவ காலகட்டத்திலும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சணை என்னவென்றால் தலைமுடி கொட்டுதலே ஆகும். இந்த பிரச்சனைக்கு ஒவ்வொரு காலகட்டத்துக்கும் நாம் ஒவ்வொரு வீட்டு வைத்தியத்தினை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு சிறந்த மூலிகை தன்மை அதிக அளவில் கொண்டுள்ள, நாம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை எண்ணெய்களின் வகையில் இன்று நாம் பார்க்க போகிறோம்.
இந்த எண்ணெயினை பயன்படுத்துவதால் ,உடலிற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இப்பொழுது இருக்கும் இந்த மழை காலத்திற்கு பயன்படுத்த கூடிய ஒரு சிறந்த எண்ணையாக இது விளங்கும், வாருங்கள் இப்போது இந்த எண்ணெயை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
இந்த எண்ணெய்க்கு தேவையான பொருள்கள் அனைத்துமே மிகவும் அதிக அளவில் ஆயுர்வேதிக் மருத்துவ குணம் நிறைந்த பொருட்களே ஆகும். அவை,
- பூண்டு
- மிளகு
- தேங்காய் எண்ணெய்
- வெந்தையம்
If you want a best home made fenugreek hair oil, please click here
செய்முறை
இப்பொழுது, முதலில் 50g அளவிற்கு நல்ல சுத்தமான தேங்காய் எண்ணெயினை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை மிதமான சூட்டினிலே சூடேற்ற வேண்டும். பிறகு, அந்த எண்ணையில் மூன்று பற்கள் பூண்டு, சிறிதளவு மிளகு மற்றும் சிறிதளவு வெந்தையத்தினை போட்டு நன்கு மிதமான சூட்டினிலே சூடேற்ற வேண்டும். பிறகு அந்த எண்ணையை அப்படியே சிறிது நேரம் விட்டு விட வேண்டும்.
இப்பொழுது, அந்த எண்ணெய் நன்கு ஆரிய பிறகு நமது விரல் பொறுக்கும் சூட்டிற்கு வந்த பிறகு சிறுது சிறிதாக நமது தலைமுடியில் நமது விரல்களை பயன்படுத்தி அப்ளை செய்து கொள்ளவேண்டும். பிறகு அரைமணி நேரம் கழித்து நமது தலைமுடியினை மைல்டு ஷாம்பூ போட்டு நன்கு அலச வேண்டும். இவ்வாறாக, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் போதும் தலைமுடி நன்கு வளரும்.
If you want a home made small onion hair oil please click here
பயன்கள்
முதலில், இந்த தேங்காய் எண்ணையில் lauric என்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது நமது முடியினை மிகவும் பளபளக்க செய்கிறது. பூண்டானது நமது தலையில் உள்ள முடியின் வேர்க்கால்களை சுத்த படுத்தி ரத்தத்தின் ஓட்டத்தினை சீராகிறது.
மிளகில் அதிக அளவில் மருத்துவ பயன்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள சத்துக்கள் நமது தலைமுடிக்கு பொடுகு மற்றும் பேன் தொல்லைகளில் இருந்து நமது தலைமுடியினை பாதுகாக்கிறது. மேலும் வெந்தையம் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. எனவே, இவை அனைத்தையும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
Comments
Post a Comment