உங்கள் முடி இரண்டு மடங்கு அதிகமாக வளர இந்த ஒரு ஹேர் ஆயில் போதும் (small onion hair oil for your hair growth )
உங்கள் முடி இரண்டு மடங்கு அதிகமாக வளர இந்த ஒரு ஹேர் ஆயில் போதும் ! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க !
பெண்களுக்கு பொதுவாக ஒவ்வொரு பருவ நிலைகளிலும் முடிக்கு ஒவ்வொரு பிரச்சனைகள் வருகிறது. ஆனால், இன்று நாம் பார்க்க போவது அனைத்து காலகட்டத்திலும், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் வீட்டிலையே ஆரோக்கியம் நிறைந்த அதிக அளவில் பயன் தர கூடிய சின்ன வெங்காயத்தினை பயன்படுத்தி முடிக்கு எவ்வாறு அற்புதமான எண்ணெய் தயாரிப்பது என பார்ப்போம். இந்த சின்ன வெங்காயத்தில் அதிக அளவில் மருத்துவ பயன்கள் இருப்பதால், நமது முடிக்கு வளர்ச்சியை அதிக அளவில் தருகிறது.
வாருங்கள், இப்பொழுது இந்த ஆயுர்வேதிக் குணம் நிறைந்த சின்ன வெங்காய ஹேர் ஆயில் வீட்டிலையே எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
இந்த ஆயுர்வேதிக் மருத்துவ குணம் நிறைந்த சின்ன வெங்காய ஹேர் ஆயில் வீட்டிலையே மிக எளிமையான தயாரிக்க முடியும். இதற்காக தேவை படுவது இரண்டு பொருள்களே ஆகும். அவை,
- சின்ன வெங்காயம் ( ஐந்து )
- தேங்காய் எண்ணெய் ( 1/4 )
செய்முறை
முதலில், ஒரு ஐந்து , ஆறு சின்ன வெங்காயத்தினை தோலுரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த சின்ன வெங்காயத்தினை இடித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு அடி கனமான ஒரு பாத்திரத்தினை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்ற வேண்டும். எண்ணெயை சூடேற்றும் பொது மிதமான சூட்டிலையே சூடேற்ற வேண்டும்.
இப்பொழுது, இந்த எண்ணெயில் நாம் ஏற்கனவே இடித்து எடுத்து வைத்திருந்த சின்ன வெங்காயத்தினையும் எண்ணையில் போட்டு நன்கு சூடேற்ற வேண்டும். சின்ன வெங்காயத்தின் சலசலப்பு முற்றிலும் போகும் வரை நன்கு சூடேற்ற வேண்டும்.பிறகு இதனை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு பின்பு மறுநாள் காலையில் வடிகட்டி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
நாம் வடிகட்டி வைத்திருக்கும் இந்த எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துவதே சிறந்தது. நம் தலைமுடிக்கு தேவையான அளவிற்கு எண்ணையை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இதனை முடியின் வேர்க்கால்களில் படும் படி நன்கு மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். முடியின் வேர்க்கால்கள் முதல் முடியின் நுனி வரை நன்கு தேய்த்து கொள்ள வேண்டும். பிறகு அரைமணி நேரம் அப்படியே விட்டு விட்டு பிறகு சீக்காய் போட்டு முடியினை நன்கு அலச வேண்டும்.
இவ்வாறாக, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் முடி இரண்டு மடங்கு அடர்த்தியாக வளர்வது உறுதியே ஆகும். கண்டிப்பாக அனைவரும் முயற்சி செய்து பாருங்கள்.
பயன்கள்
சின்ன வெங்காயத்தில் உள்ள அதிக அளவில் சல்பர் உள்ளதால் இது முடியினை வலிமையாக்குகிறது.இந்த சல்பர் முடியின் வேர்க்கால்களை வலிமையாக்கி முடியினை அடர்த்தியாகவும், வலிமையாகவும் வளர செய்கிறது.மேலும் இது முடியின் வேர்க்கால்களை வலிமையாக்குகிறது.
இந்த சின்ன வெங்காயமானது, முடிக்கு ஆன்டிஆக்ஸிடே போன்று செயல்பட்டு உங்கள் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.மேலும் ஸ்கேல்பினில் இரத்த ஓட்டத்தினை அதிக படுத்தி முடியினை மிகவும் வலிமையாகவும், அடர்த்தியாகவும் வளர செய்கிறது.
Comments
Post a Comment