முடி கொட்டுதல் நின்று முடி இருமடங்கு அடர்த்தியாக வளர, இளநிறை மறைய , amla oil, black hair, shyni hair

முடி கொட்டுதல் நின்று முடி இருமடங்கு அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ! இத ட்ரை பண்ணுங்க?

                 இன்றைய அவசர உலகத்தில் பள்ளி செல்லும் பெண்களில் இருந்து கல்லூரி செல்லும் பெண்கள் வரை அனைவர்க்கும் இருக்கும் ஒரு பெரிய ஆசை நீண்ட அடர்த்தியான கூந்தல் மற்றும் கருமையான கூந்தல் ஆகும். இதற்காக நாம் எந்த ஒரு scientific முறைகளையும் பயன்படுத்த அவசியம் இல்லை, ஏனென்றால் நாம் முன்னோர்கள் காட்டிய வழிமுறைகளை பயன்படுத்தினாலே போதும். 

                     நமற்காக, அவர்கள் எழுதி வைத்துள்ள பலவிதமான  ஆயுர்வேதிக் முறைகளில் முக்கியமான ஒன்றினை தான் இன்று நாம் பார்க்க போகிறோம். அதுவே , நெல்லிக்காய் எண்ணெய் ஆகும். இந்த நெல்லிக்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தும் போது முடி கொட்டுதல்  முற்றிலும் நின்று முடி அடர்த்தியாக வளர செய்கிறது. 

                 இப்பொழுது, இந்த எண்ணெயை எவ்வாறு தயாரிப்பது என பார்ப்போம்.

நெல்லிக்காய் எண்ணெயை தயாரிக்கும் முறை 

                      நெல்லிக்காய் எண்ணெய் தயாரிக்க முதலில், பத்து மலை நெல்லிக்காயை  கொட்டையை நீக்கி எடுத்து கொள்ளவேண்டும்.
பிறகு ,கால்லிட்டர் தேங்காய் எண்ணையை அடுத்து கொள்ள வேண்டும். இப்போது, முதலில் தேங்காய் எண்ணையை நன்கு மிதமான சூட்டிலையே சூடாக்க வேண்டும். பிறகு, அந்த எண்ணெயில் கொட்டை நீங்கி வைத்துள்ள நெல்லிக்காயை போட்டு நன்கு மிதமான சூட்டிலையே கொதிக்க வைக்க வேண்டும்.    


                        பிறகு, நெல்லிக்காயின் சலசலப்பு  முற்றிலும் அடங்கிய பின்பு அந்த எண்ணெயை நன்கு ஆறவைக்க வேண்டும். பின்பு ஒருமணிநேரம் கழித்து எண்ணையை வடிகட்டி பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை 

                             நீங்கள் தயாரித்த நெல்லக்காய் எண்ணையை, உங்கள் முடிக்கு தேவையான அளவு எண்ணையை எடுத்து வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்பு அரைமணி நேரம் அப்டியே விட்டுவிட வேண்டும். பிறகு சீக்காய் போட்டு தலை முடியினை நன்கு அலச வேண்டும். இவ்வாறு , வாரம் இரண்டு முறை குளித்தால் கண்டிப்பாக முடி கொட்டுதல் நின்று முடி அடர்த்தியாக வளரும்.


நெல்லிக்காய் எண்ணெயின் பயன்கள் 

                      நெல்லிக்காயில், phyto-nutrient, மல்டி மினரல்ஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது முடியின் வேர்க்கால்களை சுத்த படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.



                     மேலும், இந்த நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடே அதிகமாக இருப்பதால் முடி கொட்டிய இடத்தில் புது முடியினை வளர செய்கிறது. இந்த நெல்லிக்காய் இயற்கையாகவே பலவிதமான சத்துக்களை உள்ளடக்கியதால் இளநிறைய குறைகிறது. மேலும், முடியின் வளர்ச்சியை இரெட்டிப்பு வேகத்தில் அதிகப்படுத்துகிறது.


                          

Comments