உங்கள் முடி நீளமாவும் அடர்த்தியாக valara , (amla with fenugreek seed paste for your hair ) strong hair

உங்கள் முடி நீளமாவும் அடர்த்தியாகவும் வேணுமா ? அப்போ! கண்டிப்பா இதை  ட்ரை பண்ணுங்க!



                                         உங்களுக்கு மிகவும் நீளமான, அடர்த்தியான தலை முடி வேணுமா, அப்போ இந்த பேஸ்ட் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். இதற்காக, இன்று நாம் பார்க்க போவது வெந்தயம் மற்றும் நெல்லிக்காய் கலந்த ஒரு கலவை ஆகும்.இந்தபேஸ்ட்டில் இருக்கும் ஒரு special என்னவென்றால்,இந்த இரண்டு பொருள்களையும் fresh ஆக அரைத்து பயன்படுத்த போகிறோம். 

                                       இந்த பேஸ்டினை ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் பயன்படுத்தலாம்.இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது கண்டிப்பாக உங்கள் முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் மாறிவிடும். வாருங்கள் இந்த பேஸ்டினை எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.

தயாரிக்கும் முறை 

                                       முதலில் இந்த பேஸ்ட் தயாரிப்பதற்கு வெந்தயத்தினை முதல் நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.இந்த வெந்தயத்தினை உங்கள் முடிக்கு நீளத்திற்கு தேவையான அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயதை  ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும்.



home made fenugreek seed oil                      
                                       பிறகு, அதனுடன் பெரிய நெல்லிக்காய் மூன்றினை எடுத்து அதன் உள் பகுதியில் இருக்கும் கொட்டையினை நீக்கி விட்டு பிறகு சிறு,சிறு துண்டுகளாக நறுக்கி அதனையும் மிக்ஸி ஜாரினில் போட்டு கொள்ள வேண்டும். இப்பொழுது, இந்த இரண்டு பொருள்களையும் நன்கு பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த கலவையுடன் சிறிதளவு தயிர் கூட சேர்த்து கொள்ளவேண்டும்.


home made amla hair oil for hair growth

                                       இப்பொழுது, இந்த பேஸ்டினை உங்கள் விரல் நுனிகளினால், சிறிது சிறிதாக எடுத்து, உங்கள் முடியின் வேர்க்கால்கள் முதல் முடியின் நுனி வரை நன்கு அப்ளை செய்து கொள்ளவேண்டும். பின்பு, இந்த பேஸ்டினை தலை முழுவதும் நன்கு அப்ளை செய்து சிறிது நேரம் நன்கு மசாஜ் கொடுக்க வேண்டும்.பிறகு இதனை அரைமணி நேரம் அப்படியே விட்டு  வேண்டும்.பிறகு குளிர்ந்த நீரினால் தலையினை ஷாம்பூ பயன்படுத்தாமல் அலச வேண்டும்.


                                      இவ்வாறாக, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வரும் பொழுது, உங்களது தலைமுடியானது,நீளமாகவும், அடர்த்தியாகவும் நன்கு வளரும்.

பயன்கள் 

                                      இந்த வெந்தையமானது , உங்கள் தலை முடிக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் inflammetory போன்று செயல்பட்டு உங்களுக்கு தலைமுடி உதிர்வதை குறைத்து ,பொடுகு போன்ற பிரச்சனைகள் வரமால் முடியினை நன்கு வளர செய்கிறது.



                                      மேலும், இதில் உள்ள சத்துக்கள் உங்கள் முடியின் வேர்க்கால்களை சுத்த படுத்தி இரத்த ஓட்டத்தினை அதிக படுத்துகிறது.இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, அடர்த்தியான முடியினையும் நமக்கு தருகிறது. மேலும், கொட்டிய இடங்களில் புது முடியினையும் வளர செய்கிறது.

Comments