அபார முடி வளர்ச்சிக்கும், பளபளப்பான முடி வளர்ச்சிக்கும் வெந்தய எண்ணையை எவ்வாறு வீட்டிலையே தயார் செய்வது என பார்ப்போம்!

அபார முடி வளர்ச்சிக்கும், பளபளப்பான முடி வளர்ச்சிக்கும் வெந்தய எண்ணையை எவ்வாறு வீட்டிலையே தயார் செய்வது என பார்ப்போம்!



                    இன்றைய நவீன காலத்தில் கல்லூரி செல்லும் பெண்கள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் ஒன்றுதான் இந்த முடி கொட்டும் பிரச்சனையை ஆகும்.


                   இதற்கான, காரணம் வெப்பம்,மாசுபாடு மற்றும் சுற்றுசூழலை ஆகும். இந்த பிரச்சனையை இயற்கையான முறையில் எவ்வாறு சரி செய்வது என பார்ப்போம்.


                   நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு எளிய மற்றும் ஆரோக்கியம் மிக்க ஒரு சிறந்த பொருள் தான் வெந்தயம். இதனை எண்ணெயாக எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்.


                    இப்பொழுது, ஒரு உள்ளங்கை அளவு வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இதனை 1/2லி  தேங்காய் எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில்  நன்கு சூடாக்கவும்.


                    பிறகு, எண்ணெய் நன்கு ஆறிய பிறகு வடிகட்டி பயன்படுத்தவும். இதனை குளிக்க போகும் அரைமணி நேரத்திற்கு முன்பு நமது முடியின் வேர் கால்களில் படும்படி அப்ளைசெய்து நன்கு மசாஜ் செய்யவும்.



                    அரைமணி நேரத்திற்கு பிறகு மைல்டு ஷாம்பூ போட்டு குளிக்கவும். இவ்வாறு, தொடர்ந்து வாரம் இருமுறை செய்தால் அடர்த்தியான பட்டு போன்ற முடி வளரும். 
                  

                  

Comments