முடியின் இரட்டிப்பு வளர்ச்சி,அடர்த்தியான முடி வளர்ச்சி

 மிகவும் மெலிதாக இருக்கும் முடியினை மிகவும் அடர்த்தியாகவும் இரட்டிப்பு வேகத்தில் வளர செய்வதற்கும் விட்டியையே கருஞ்சீரக எண்ணெய் எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்!




                 இன்று பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான ஓன்று, முடி கொட்டும் பிரச்சனை மற்றும் மிகவும் மெல்லிய கூந்தல் ஆகும். இதற்கு முக்கியமான காரணம் உடல் சூடு மற்றும் உணவு பழக்கவழக்கம் ஆகும்.




               இந்த உடல் சூட்டை குறைக்கும் ஒரு அருமையான எண்ணெய் தான் கருஞ்சீரக மூலிகை எண்ணெய் ஆகும். இதனை வீட்டிலையே எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.




               இந்த எண்ணெய்க்கு நாம்  முழுவதும் பயன்படுத்த போவது தேங்காய் எண்ணெய் மட்டுமே ஆகும். இந்த எண்ணெய்க்கு தேவையான பொருள்களை பார்ப்போம்.

                          தேங்காய் எண்ணெய் - 1/2 லி 

                          கருஞ்சீரகம்                     - 1/4 கிராம் 



              மேற்கண்ட இரண்டு பொருள்களையும் இந்த அளவுகளில் எடுத்து கொள்ள வேண்டும். பிறகு , தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் காய்ச்சி கொள்ள வேண்டும். அதனுடன் இந்த கருஞ்சீரகத்தையும் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதனை இரவில் செய்யவேண்டும்.




                பிறகு, இந்த கலவையை இரவு முழுவதும் விட்டு விட்டு காலையில் வடிகட்டி பயன்படுத்தவும். இந்த எண்ணெயை regular எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்.




              இல்லையென்றால் , தலைக்கு குளிக்க செல்வதற்கு  அரைமணி நேரத்திற்கு முன்பு இதை தலையில் நன்கு அப்ளை செய்து, முடியின் வேர் கால்களில் படும்படி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு, மைல்டு ஷாம்பு போட்டு குளிக்கவும்.




            இந்த எண்ணெயை , முடியின் வேரினை ஆரோக்கியமாக இருக்க செய்கிறது. மேலும் முடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அரிப்பினை தடுக்கிறது.   




             இதனை, வாரம் மூன்று முறை செய்தால் முடி கொட்டுவது குறைந்தது, முடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் நன்கு வளரும்.


Comments