உங்கள் முடி இயற்கையான முறையில் கருமையாக வேண்டுமா? அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர வேண்டுமா? அப்படியென்றால், அதற்கு இந்த ஒரு இலை போதும்!

நீளமான கூந்தல் எந்த பெண்ணிற்கு தான் பிடிக்காது, இன்றைய கால கட்டத்தில் உள்ள பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகமாகவே இருக்கிறது. அதற்கு காரணம் நாம் பழங்கால கூந்தல் பராமரிப்பு முறைகளை மறந்து போனதே ஆகும்.

அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது கரிசலாங்கன்னி இலையை ஆகும். இந்த இலையானது மிகவும் அற்புதமான ஆயுர்வேதிக் இலை ஆகும்.

இந்த கரிசலாங்கன்னி இலையானது முடியின் வேர் கால்களை சுத்த படுத்தி பொடுகு தொல்லை வராமல் பார்த்துக்கொள்கிறது. மேலும், இது முடி கொட்டுவதை குறைத்து, முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.

இந்த கரிசலாங்கன்னி இலை ஹேர்மஸ்க் எப்படி வீட்டிலேயே தயார் செய்வது என பார்ப்போம். இப்பொழுது, இரண்டு கை பிடி அளவு கரிசலாங்கன்னி இலையை அடுத்து கொண்டு அதனுடன் மூன்று டி ஸ்பூன் தயிர் கலந்து மிக்ஸியில் நன்கு பேஸ்ட் போல அரைக்கவும்.

இந்த கலவையை முடியின் வேர் கால்களில் படும் படி நன்கு அப்ளை செய்து மசாஜ் செய்யவும். பிறகு, அரைமணி நேரம் கழித்து ஷாம்பு எதுவும் உஸ் செய்யாமல் தலை முடியை அலசவும்.

இதனை வாரம் இரண்டு முறை செய்வதனால், நரைமுடி கருப்பாகும் மற்றும் முடியும் கருகருவென ஆரோக்கியமாக வளரும்.
Comments
Post a Comment