உடல் சூட்டினால் உங்களுக்கு முடி கொட்டுகிறதா? உடல் உல்உஷ்ணம் அதிகமாக இருக்கிறதா? இதோ! அருமையான, நமது பாட்டி காலத்து மூலிகை எண்ணெய் வீட்டிலையே எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்!

உடல் சூட்டினால் உங்களுக்கு முடி கொட்டுகிறதா? உடல் உல்உஷ்ணம் அதிகமாக இருக்கிறதா? இதோ! அருமையான, நமது பாட்டி காலத்து மூலிகை எண்ணெய் வீட்டிலையே எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்!




                இன்றைய, காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை மிகவும் அதிகமாகவே இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது, ஆனாலும் மிகவும் முக்கியமான காரணம் உடல் சூடு ஆகும். இதற்கு மிகவும் சிறந்த மருந்து நமது பாட்டி காலத்து மூலிகை எண்ணெய் ஆகும்.



                 இந்த எண்ணெயை வீட்டிலையே எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.இதற்கு தேவையான பொருட்களை பார்ப்போம்.
  • நல்லண்ணெய் ( 200ml )
  • மிளகு  ( 1ஸ்பூன் )
  • சீரகம்  ( 1ஸ்பூன் )
  • இடிச்ச பூண்டு  ( 6nos )
         
                மேற்கண்ட பொருள்களை எடுத்து கொள்ளவேண்டும். முதலில் நல்லண்ணெய்யை நன்கு சூடு செய்து அதனுடன் சீரகம் ,மிளகு மட்டும் பூண்டினை சேர்த்து நன்கு மிதமான சூட்டில்  சூடேற்றவும்.



                பிறகு, இந்த எண்ணெயை கை பொறுக்கும் சூட்டில் எடுத்து தலையில் அப்பளை செய்து நன்கு மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து ஷிகக்காய் பயன்படுத்தி தலையை அலசவும்.




                பூண்டில் antimicrobial என்ற சத்து முடியின் வேர் கால்களில் உள்ள கேட்ட கிருமிகளை கொன்று முடி வேர்களை ஆரோக்கியமாக்குகிறது.




                மிளகில் வைட்டமின் A , விட்டமின் C போன்ற பல சத்துக்கள் உள்ளது. இவை அனைத்தும் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் மிளகு உடல் சூடியினையும் குறைகிறது.



                சீரகத்தில் இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி தன்மை உள்ளது மற்றும் நல்லண்ணெய்யும் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தர கூடியவை. எனவே இந்த அனைத்து கலவையும் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தருகிறது.




                இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தினால் போதும்.முடி நன்கு வளரும். உடலும் சூடு இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் . முடியும் நன்கு வளரும்.
               


      
       
            

Comments