முடி கொட்டுதல் நின்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்

கொய்யா இலைசாரை இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் முடி கொட்டுதல் நின்று முடி வளர்ச்சி அதிகரிக்கும் !


                                 
                      முடி கொட்டுதல் முற்றிலுமாக நின்று முடி வளர்ச்சி அதிகரிக்க கொய்யா இலை சாற்றினை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்.இந்த கொய்யா இலையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்ற முடியின் வளர்ச்சிக்கு முக்கியமான விட்டமின்கள் உள்ளன.



                      இந்த கொய்யா இலையானது முடியின் வேர் கால்களை சுத்தபடுத்தி இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. இதனால், முடியின் வளர்ச்சி அதிகமாகும். மேலும், இதில் உள்ள வைட்டமின் பி முடியின் வளர்ச்சியை அதிக படுத்துவது மற்றும்  முடி உடைத்தல் மற்றும் முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்பினையும் சரி செய்கிறது.




                      மேலும், கொய்யா இலையில் உள்ள வைட்டமின் சி முடிக்கு ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. முடியின் வேர்க்கால்களை வலுமையாக்குகிறது.



                     இப்போது , ஒரு கை பிடி அளவு கொய்யா இலையை எடுத்து கொள்ளவேண்டும். இதனை மிக்ஸியில் போட்டு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சாறினை ஒரு spray  பாட்டிலில் ஊற்றி தலையில் அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து ஷாம்பூ எதுவும் போடாமல் தலையை அலச வேண்டும்.



                      இவ்வாறு, வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முடி கொட்டுதல் முற்றிலுமாக நின்று முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். முடி ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வளரும்.
                  

Comments