மிகவும் அற்புதமான, ஆரோக்கியமான இயற்கையான முறையில் முடி வளர

 மிகவும்  அற்புதமான, ஆரோக்கியமான இயற்கையான முறையில் முடி வளர சூப்பர் ஆயில் தயார் செய்வது  என பார்ப்போம்!



                 நமது முடி எந்த ஒரு காரணத்தினால் கொட்டினாலும் இந்த எண்ணெயானது நமக்கு பலன் அளிக்க கூடியது. ஏனென்றால், இந்த எண்ணெய் மூன்று இலைகளின் சத்துக்கள் உள்ளன.



                நாம் தயாரிக்கும் இந்த எண்ணெய், மூன்று இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இலைகளின் சத்துக்கள் நிறைந்தவை. இந்த எண்ணெய் முடி கொட்டுதல் முற்றிலும் நின்று முடியினை இரட்டிப்பாக வளர செய்யும்.

                இந்த எண்ணெய் தயாரிக்கும் முறையை பார்ப்போம். இப்போது,

  • செம்பருத்தி இலை 
  • கொய்யா இலை 
  • மருதாணி இலை 
               மேற்கண்ட இந்த மூன்று இலைகளைவும் சம அளவு எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, இந்த மூன்று இலைகளையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து கொள்ள வேண்டும்.


               பிறகு, 1/2லி  தேங்காய் எண்ணெயை மிதமான சூற்றில் நன்கு சூடேற்றவும். இப்போது இந்த எண்ணெயில் அரைத்த இலைகளையும் போட்டு நன்கு மிதமான சூட்டிலையே சூடேற்றவும். இலைகளின் சலசலப்பு அடங்கிய பிறகு எண்ணெய் நன்கு ஆரிய பிறகு பயன்படுத்தவும்.



              இந்த எண்ணெயை ரெகுலர் ஆயிலாக பயன்படுத்தலாம். இல்லையென்றால், தலைக்கு குளிக்கும் பொழுது இந்த ஆயில் அப்ளை செய்தும் பயன்படுத்தலாம்.


            இந்த மூன்று இலைகளில் உள்ள சத்துக்கள் முற்றிலும் முடிக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.முடி நல்ல பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளர செய்கிறது. வாரத்தில் மூன்று முறை இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.

Comments