முடி கொட்டுதல் நின்று, முடியின் வளர்ச்சியை இரட்டிப்பாகவும் , முடியின் வேர் கால்களை உறுதியாக்குவதற்கும் வீட்டிலையே கத்தாழை வெந்தய எண்ணெயை

 முடி கொட்டுதல் நின்று, முடியின் வளர்ச்சியை இரட்டிப்பாகவும் , முடியின் வேர் கால்களை உறுதியாக்குவதற்கும் வீட்டிலையே கத்தாழை  வெந்தய எண்ணெயை எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.



                    உலகில் உள்ள அனைத்து பெண்களும் விரும்பும் ஒரு விசியம்  இந்த நீண்ட அடர்த்தியான கூந்தல் ஆகும். ஆனால்  இது அனைத்து பெண்களுக்கும் கிடைப்பது இல்லை, அதற்கு உணவு பழக்கவழக்கம், சுற்றுசூழல் என பல காரணங்கள் உள்ளன. சத்தான உணவுகளை தின்பதன்  மூலமும் ஆரோக்கியமான எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவதன் மூலமும் இதனை சரி செய்ய முடியும்.



                     அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கத்தாழை வெந்தய எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் மிகவும் சிறந்த மருத்துவ குணம் நிறைந்த எண்ணெய் ஆகும். இந்த எண்ணெயை எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.




                      முதலில் கத்தாழை செடியின் ஒரு இலையை பறித்து கொள்ள வேண்டும்.பிறகு அதை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு அதன் வயிற்று பகுதியை கத்தியால் கீர வேண்டும். 




                      பிறகு கத்தாழை கீரிய பகுதியில் 100g  வெந்தயத்தினை போடவும், இப்போது இதனை மூடி நூலினால் இறுக்கமாக கட்டவும். பின்பு இதனை 48hrs அப்படியே விட்டு விடவும். பிறகு அதனை ஓபன் செய்து பார்த்தால் வெந்தையம் அனைத்து முலைகட்டி வளர்ந்திருக்கும்.



                      இப்பொழுது இந்த வெந்தயத்தை வெளியே அடுத்து வெயிலில் நன்கு காயவைக்கவும். நன்கு காய்ந்த பிறகு நாம் தினசரி யூஸ் பண்ணும் தேங்காய் எண்ணெயில் போட்டுக்கொள்ளவும். இந்த எண்ணெயை நாம் தொடர்ந்து பயன்படுத்தலாம்.



                     இந்த வெந்தையமானது, முடியின் வேர் கால்கள் வலிமையாக இருப்பதற்கும், பொடுகு போன்ற போன்ற பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கும் மற்றும் முடியின் வேர்க்கால்களில் அரிப்பு போன்றவை வராமல் இருப்பதற்கும் உதவுகிறது.



                    மேலும் கத்தாழையானது முடியை பட்டு போல மிருதுவாகவும்,பளபளப்பாகவும் உதவுகிறது.மேலும் இது முடியின் வளர்ச்சியை ஆரோக்கியமாக தூண்டுகிறது. 



                    எனவே, இந்த எண்ணெயை அனைவரும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன் படுத்தும் பொழுது, முடி கொட்டுதல் குறைந்து முடியின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் இருக்கும்.

                


                  

                  

Comments