முடி அதிகமாகவும் இரட்டிப்பு வேகத்தில் வளரவும் கருவேப்பிலை பொடியை இவ்வாறு பயன்படுத்தவும்

உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஆசை தான் இந்த நீண்ட அடர்த்தியான கூந்தல், இதனை மிகவும் எளிதாகவும் ஒரே ஒரு இலையின் மூலமும் இதை சரி முடியும். அந்த அற்புத இலை தான் கருவேப்பிலை, இதனை எவ்வாறு முடிக்கு பயன்படுத்துவது என பார்ப்போம்.

முதலில் இரண்டு கை பிடி அளவுக்கு கருவேப்பிலை இலையை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்கு கழுவிய பின்பு நிழலில் உலர்த்தவும்.வெயிலில் காயவைக்க கூடாது. இந்த இலை நன்கு உலர்ந்த பிறகு மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக்க வேண்டும்.

இந்த பொடியை ஒரு காற்று போகாத டப்பாவில் இறுக்கமாக மூடி வைத்து கொண்டு எப்பொழுது வேணுமென்றாலும் பயன்படுத்தி கொள்ளலாம். முடிக்கு இந்த பொடியை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்.

இப்பொழுது மூன்று ஸ்பூன் கருவேப்பிலை பொடியை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு , அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் லெமன் கலந்து நன்கு கலந்து அரைமணி நேரம் கழித்து முடியில் நன்கு அப்ளை செய்ய வேண்டும்.

தயிரில் உள்ள ப்ரோட்டீன், மக்னிசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் எ முடிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கிறது. முடியின் வேர் கால்களை வலிமையாக்குகிறது.

லெமோனில் உள்ள சிட்ரஸ் ஆசிட் மற்றும் மட்டும் வைட்டமின் சி முடியினை ஆரோக்கியமாக வளர செய்கிறது.முடியின் வேர் கால்களை சுத்தப்படுத்தி முடியினை நன்கு வளர செய்கிறது. எனவே ,வாரம் இரண்டு முறை இதை செய்தால் முடி நன்கு வளரும்.
Comments
Post a Comment