பட்டு போன்ற மிருதுவான , அழகான முடி வளர்ச்சிக்கு தயிர் மற்றும் கடலைமாவினை எவ்வாறு பயன்படுத்தலாம் என பார்ப்போம்!

இன்று நாம் பார்க்க போவது மிகவும் அற்புதமான,நமது முன்னோர்கள் பயன்படுத்திய பழங்காலத்து முடி பராமரிப்பு முறை ஆகும். இந்த வகையிலான முடி பராமரிப்புகளை செய்தனால் தான் அவர்களது முடி மிகவும் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருந்தது.
எனவே, நாமும் இந்த முறையை பயன்படுத்தி எவ்வாறு முடி வளர்ச்சியை அதிக படுத்தலாம் என பார்ப்போம்.

முதலில் ஐந்து ஸ்பூன் அளவிலான கடலை மாவினை எடுத்து கொள்ளவேண்டும். பிறகு, அதனுடன் மூன்று ஸ்பூன் அளவிலான தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும். இப்போது
இந்த கலவையை தலையில் அப்ளை செய்து முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு, அரைமணி நேரம் கழித்து ஷாம்பு ஏதும் பயன்படுத்தாமல் வெதுவெதுப்பான நீரில் முடியினை நன்கு அலசவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முடி பளபளப்பாக நன்கு வளரும்.

தயிரில் உள்ள பொட்டாசியம் கால்சியம் மற்றும் வைட்டமின் எ,முடியை ஆரோக்கியமாக வலிமையாகிறது. மேலும், கடலைமாவில் உள்ள கார்போஹைட்ரெட்,பைபர் மற்றும் ப்ரோடீன் முடியினை பளபளவென்று ஆகிறது.
Comments
Post a Comment