முடி கொட்டுவது நின்று முடி மிகவும் அடர்த்தியாக வளர்தல், முடியின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்திலையும் வளர்தல்

முடி கொட்டுவது நின்று முடி அடர்த்தியாக வளரவும் , முடியின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் வளரவும் வீட்டிலையே செம்பருத்தி, கருவேப்பிலை எண்ணெய் வீட்டிலையே எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்!




                 இன்றைய, மாசுபாடு நிறைந்த உலகத்தில் கல்லூரி பெண்களில் இருந்து ஹவுஸ் wife வரைக்கும் அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை முடி கொட்டுதல் மற்றும் முடி வளர்ச்சி இல்லை என்பதே ஆகும்.





                  இந்த பிரச்சனைக்கு நாம் வீட்டில் இருந்தே இரண்டு இலைகளை மட்டுமே வைத்து எண்ணெய் தயார் செய்து, சரி செய்ய முடியும். இவற்றை எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.




                 இப்பொழுது, ஒரு கை பிடி அளவு செம்பருத்தி இலையையும், ஒரு கை பிடி அளவு கருவேப்பிலை இலையையும் சம அளவு எடுத்து கொள்ளவேண்டும். பிறகு 1/2லி  தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளவேண்டும்.




                 இப்பொழுது இந்த இரண்டு இலைகளையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து கொள்ள வேண்டும்.பிறகு ,ஒரு அடி கனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூற்றில் சூடேற்றவும்.




                 பிறகு ,இந்த எண்ணெயுடன் அரைத்து வைத்த இலைகளையும் நன்கு  கலந்து கொதிக்க விட வேண்டும். பிறகு, ஒரு நாள் இரவு முழுவதும் விட்டு விட்டு மறுநாள் காலையில் இவற்றை வடிகட்டி பயன்படுத்தவும்.




                இந்த எண்ணெயை தலையில் அப்ளை செய்து பத்து நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். பிறகு அரைமணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும்.




               இவ்வாறாக, வாரம் இரண்டு முறை குளித்து வந்தால் முடி கொட்டுதல் முற்றிலும் நின்று முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும். முடியின் வளர்ச்சியும் இரட்டிப்பாக இருக்கும்.
                 

Comments