பட்டுபோன்ற மிருதுவான முடி வளர , முடியின் வளர்ச்சியும் அதிகரிக்க

பட்டுபோன்ற மிருதுவான முடி வேண்டுமா? முடியின் வளர்ச்சியும் அதிகரிக்க வேண்டுமா? அப்போ! அரிசி கஞ்சியை இந்த முறையில் பயன்படுத்துங்கள். 



            உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீளமான கூந்தல் எவ்வாறு கனவாக உள்ளதோ! அதே போல,முடி பட்டு போலவும் மிருதுவாக இருப்பதும் கூட அனைத்து பெண்களின் பெரிய ஆசையாக உள்ளது.எனவே, இதனை மிகவும் எளிமையான முறையில் நாம் வேஸ்ட் செய்யும் அரிசி வடிக்கும் கஞ்சியில் இருந்து சரி செய்ய முடியும்.


             இந்த அரிசி கஞ்சி பயன்படுத்தும் முறையானது,நாம் முன்னோர்கள் பயன்படுத்திய பழங்காலத்து பாரம்பரிய முறை ஆகும். இதனை எவ்வாறு பயன்படுத்துவது, தலைக்கு எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம்.



              இப்பொழுது, இரவு உணவு செய்யும் கஞ்சியை எடுத்து கொள்ள வேண்டும்.ஒருநாள் இரவு முழுவதும் கஞ்சியை நன்கு புளிக்க வைக்கவும். பிறகு, மறுநாள் காலையில் அந்த கஞ்சியில் ஐந்து டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் பாலையும் அதனுடன் கலந்து தலையில் அப்ளை செய்யவும்.



               அரிசி கஞ்சியில் உள்ள சத்தானது,முடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதற்கும் உதவுகிறது. மேலும், இது ஸ்கேல்ப் பலப்படுத்துவதற்கும், முடியின் வளர்ச்சியை தூண்டுவதற்கும் பயன்படுகிறது. 



              தேங்காய் பாலானது ஒரு இயற்கை கண்டிஷனர் போல ஆகும். இது முடியை  வேரிழையே வலிமையாக்குகிறது. இதுவும் முடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வளர செய்கிறது.



              எனவே, இவற்றை தலையில் அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து ஷாம்பு யூஸ் செய்யாமல் தலையை அலசவும். இவ்வாறாக, வாரம் இரண்டு முறை செய்தால் முடி பளபளப்பாகவும், மிருதுவாகவும் நன்கு வளரும்.

            

          





Comments