நீண்ட அடர்த்தியான முடிக்கும், கருமையான மற்றும் ஆரோக்கியமான முடிக்கும் வீட்டியையே மருதாணி பொடி ( henna ) எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்!
நீண்ட அடர்த்தியான முடிக்கும், கருமையான மற்றும் ஆரோக்கியமான முடிக்கும் வீட்டியையே மருதாணி பொடி ( henna ) எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்!

கூந்தல் மிகவும் அழகாக வளர வேண்டும் என்பதே அனைத்து பெண்களுக்கும் இருக்கும் மிக பெரிய ஆசை ஆகும். அந்த வகையில், பெரும்பங்கு வகிப்பது இந்த மருதாணி பொடி ஆகும். இதனை வீட்டிலையே எவ்வாறு தயார் செய்வது மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்.

இரண்டு கைப்பிடி அளவு மருதாணி இலையை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு, இந்த இலையை நிழலில் உலர்த்தி காயவைக்கவும்.

பிறகு, இதனை மிக்ஸியில் நன்கு பவுடர் போல அரைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடர் காற்று போகாத டப்பாவில் போட்டு வைக்கவும். பிறகு, நமக்கு தேவையான அளவை எடுத்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இப்பொழுது , ஐந்து ஸ்பூன் henna எடுத்து அதனுடன் மூன்று ஸ்பூன் தயிர் மற்றும் மூன்று ஸ்பூன் லெமன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும். இந்த கலவையை அரைமணி நேரம் கழித்து தலையில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும்.

இந்த கலவை, முடியின் வேர் கால்களை பலப்படுத்தி கொட்டிய முடியை மீண்டும் வளர செய்கிறது.லெமன் மற்றும் தயிர் உடல் சூட்டினை கூட குறைக்குது.

எனவே,வாரம் இரண்டு முறை இதனை தலைக்கு பயன்படுத்துவதால் முடி நன்கு அடர்த்தியாக,கருமையாக, பளபளப்பாக நன்கு வளரும்.
Comments
Post a Comment