முடியின் ஆரோக்கியம் அதிகரிக்க, பொடுகு தொல்லை, பேன் தொல்லை குறைய

முடியின் ஆரோக்கியத்திற்கும், பேன் தொல்லை மற்றும் பொடுகு தொல்லை முற்றிலும் குறைவதற்கும்  இதை ட்ரை பண்ணுங்க!



                     உலகில் உள்ள  அனைத்து பெண்களுக்கும் இருக்கும் பல பிரச்சனைகளில் ஓன்று முடி கொட்டும் பிரச்சனை ஆகும். அதற்கான முக்கியமான காரணங்களில் ஓன்று தான் இந்த பொடுகு மற்றும் பேன் தொல்லை, இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிய முறையில் எவ்வாறு சரி  செய்வது என பார்ப்போம்.




                     முதலில் மூன்று ஸ்பூன் மிளகினை நன்கு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணையை நன்கு மிக்ஸ் செய்து மிதமாக சூற்றில் சூடேற்றவும். பிறகு இந்த எண்ணெயை வெதுவெதுப்பாகவே இருக்கும் போதே தலையில் நன்கு அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.



                      பிறகு இதை அப்படியே அரைமணி நேரம் விட்டு விட்டு பின்பு சீகைக்காய் போட்டு தலையின் முடியை அலசவும். இதனை, வாரம் இரண்டு முறை செய்வதன் மூலம் தலையில் உள்ள பேன் மற்றும் பொடுகு முற்றிலும் குறைந்து முடி மிகவும் ஆரோக்கியமாக வளருகிறது.



                       இதில் மிளகில் உள்ள கார தன்மை பேன் மற்றும் போடுகினை முற்றிலும் அழிக்கிறது. மேலும் தலை முடியின் வேர்க்கால்களை சுத்த படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. எனவே ,இந்த எண்ணெயை பயன்படுத்தி முடியை பாதுகாத்துக்கொள்ளுங்கள். 
            


Comments