முடி இரண்டு மடங்கு அதிகமாக வளர

இயற்கையான முறையில் உங்கள் முடி இரண்டு மடங்கு அதிகமாக வளர இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க!

                                      உங்களுக்கு மிகவும் அடர்த்தியான, அழகான முடி வேண்டுமா? அப்போ! இந்த அற்புதமான ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க, இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் பொது இரட்டிப்பு வேகத்தில் உங்களுக்கு முடி வளரும். இன்றைய காலகட்டத்தில் உள்ள  பெண்களுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை முடி கொட்டுதல் மற்றும் முடி வளர வில்லை என்பதே ஆகும்.எனவே, இவற்றை பயன்படுத்துங்கள். இப்பொழுது இவற்றிற்கு தேவையான பொருள்களை பார்ப்போம்.


தேவையான பொருள்கள் 

           இந்த ஹேர் மாஸ்க்கிற்கு தேவையானைவை மூன்று பொருள்கள்.
 அவை,
  • கடலை மாவு 
  • தயிர் 
  • லெமன்

செய்முறை 

                          முதலில் ஒரு பௌலில் ஐந்து டீ ஸ்பூன் கடலை மாவினை எடுத்து கொள்ள வேண்டும், பிறகு அதனுடன் மூன்று டீ ஸ்பூன் தயிரினை சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் பாதி லெமோனையும் சேர்த்து நன்கு கலந்து 15 mins ஊறவிடவும்.
                           பிறகு, இந்த கலவையை தலையில் நன்கு அப்ளை செய்து  வேர்க்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு, இதனை அரைமணி நேரம் கழித்து  ஷாம்பூ use பண்ணாமல் வெதுவெதுப்பான  நீரில் முடியினை அலசவும்.

 பயன்கள் 

                     கடலை மாவு  



                              
                                       முடியின் வளர்ச்சிக்கு கடலைமாவின் பங்கு மிகவும் அதிகம். இந்த கடலை மாவினை நம் முன்னோர்கள் பயன்படுத்தி அதிக பலன்களை அடைந்துள்ளனர். இந்த மாவில் அதிக அளவில் ப்ரோட்டீன் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால்,  இது முடியினை வலிமையாக்குகிறது. மேலும் இது முடிபொலிவாக்குகிறது. இந்த கடலை மாவு முடிக்கு இயற்கையான கண்டிஷனர் போல செயல்படுகிறது.

                      தயிர்  



   
                                      இந்த தயிரில் ஏராளமான ப்ரோடீன் சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் இது நமது முடிக்கு பொடுகு தொல்லை வரமால் பாதுகாப்பாக வைக்கிறது. மேலும் தயிர் முடியின் வேர்க்கால்களை வலிமையாக்குகிறது.  முடியினை பட்டு போல ஜொலிக்க செய்கிறது.

                  லெமன் 




                                   இயற்கையாக லெமினில் அசிடிக் ஆசிட் இருப்பதால் முடியின் வேர்க்கால்களை  நன்கு சுத்த படுத்தி புது முடியினை வளர செய்கிறது. மேலும் முடியில் உள்ள அழுக்குகளை நீக்கி தலை முழுவதும் சுத்தப்படுத்துகிறது. எனவே, இது முடி கொட்டுவதை நிறுத்தி முடியினை நன்கு வளர செய்கிறது.

          இந்த இயற்கையான அற்புத ஹேர் மாஸ்க்கை வாரம் இரண்டு முறை  பயன்படுத்தி அனைவரும் பயன்பெறுங்கள்.
   
                        


             
           

Comments