முடிகொட்டுதல் முற்றிலும் நின்று முடி ஆரோக்கியமாக நன்கு வளர வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க!
இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரு பெரிய problem முடி கொட்டுகிறது, மீண்டும் முடி வளரவில்லை என்பதே ஆகும். கல்லூரி பெண்கள் முதல் அனைத்து பெண்களுக்கும் இது ஒரு மன உளைச்சலை கூட உருவாக்குகிறது. இந்த பிரச்சனையை மிகவும் எளிமையாக பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என பார்ப்போம்.
இப்போது, நாம் செய்யப்போவது ஒரு சிறந்த மருத்துவ குணம் நிறைந்த hair pack இதை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- கொய்யா இலை
- வெந்தயம்
- புளிச்ச அரிசி காஞ்சி
செய்முறை
இந்த செய்முறைக்கு முதலில் கொய்யா இலையினை இரண்டு கை பிடி அளவிற்கு கொய்யா இலையினை பறித்து வெயிலில் நன்கு காய வைத்து பொடி போல அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் இரண்டு ஸ்பூன் வெந்தய பொடியினையும் மற்றும் தேவையான அளவு அதனுடன் புளிச்ச அரிசி கஞ்சியினையும் போட்டு நன்கு கலக்க வேண்டும். பிறகு இந்த கலவையை பத்து நிமிடம் கழித்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment