தலையில் அரிப்பா? பொடுகு தொல்லையா? பேன் தொல்லையா? dandruff solution,neem water,veppilai neer,

தலையில் அரிப்பா? பொடுகு தொல்லையா? பேன் தொல்லையா? அப்போ ! இந்த கண்டிப்பா ட்ரை பண்ணுங்க !

                      பெண்களுக்கு அழகு என்றாலே முதலில் அனைவரும் கூறுவது நீண்ட அடர்த்தியான, ஆரோக்கியமான, அழகான கூந்தலே ஆகும். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அனைத்து பெண்களுக்கும் அழகான ஆரோக்கியமான  கூந்தல் இருக்கின்றனவா ? என்றால் அது கேள்வி குறியே ஆகும். அதற்கு முக்கியமாக பல காரணங்கள் இருந்தாலுமே, முடி கொட்டுதல் மற்றும் வளர்ச்சி தடை படுத்தலுக்கு மிகவும் முக்கியமான காரணம் பொடுகு தொல்லை மற்றும் பேன் தொல்லை ஆகும்.



                           இந்த இரண்டு பிரச்சனைகளையும், இயற்கையான முறையில் எவ்வாறு சரிசெய்யலாம் என விரிவாக பார்ப்போம்.

தேவையான பொருள்கள் 

                             இப்பொழுது, இந்த பொடுகு மற்றும் பேன் தொல்லைக்கு நாம் பயன்படுத்த போவது ஒரே ஒரு இலையே ஆகும். இதற்கு அதிகமான பொருள்  தேவைப்படாது, அவை

                  


  • வேப்பிலை  ( ஒரு கைப்பிடி  அளவு )
  • தண்ணீர்       ( 1 லிட்டர்  )           

செய்முறை 

                              முதலில், நாம் எடுத்து வைத்துள்ள ஒரு spray 1 லிட்டர் அளவுள்ள தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் ஒரு கை பிடி அளவுள்ள வேப்பிலையை அதில் போட்டு நன்கு பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். நாம் ஊற்றிய 1 லிட்டர் 1/2 லிட்டராக வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரின் நிறம் கூட கிரீன் கலராக மாற வேண்டும்.

பயன்படுத்தும் முறை 

                               பிறகு, அதனை நன்கு ஆற விட வேண்டும். பின்பு அதனை ஒரு spray பாட்டிலில் ஊற்றி அதனை தலை முழுவதும், முடியின் வேர்க்கால்களில் படி நன்கு spray செய்து கொள்ளவேண்டும். அதன் பிறகு, ஒரு பத்து நிமிடம்  நமது விரல்களை வைத்து நன்கு மசாஜ் கொடுக்க வேண்டும்.



          

                               இவ்வாறு, நாம் வாரம் நான்கு முறை செய்யும் பொது முடியில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகு தொல்லை அனைத்தும் முற்றிலும் நீங்கி முடியின்  வேர்க்கால்களை சுத்த படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

பயன்கள் 

                               இந்த வேப்பஇலையில் ஏராளமான மருத்துவ சத்துக்கள் உள்ளன. அவைகள் ஆன்டிபாக்டீரியா, antifungal ,ஆன்டி-inflammetory போன்ற சத்துக்கள் மிகவும் அதிகமாக உள்ளதால், இவை அனைத்தும் முடியின் வேர்க்கால்களை சுத்த படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்கி முடியினை ஆரோக்கியமாக வளர செய்கிறது.

Comments