முடி கொட்டுதல் நின்று முடியின் வளர்ச்சியை தூண்டும் onion hair oil/ strong and thick hair growth/hair growth oil
முடி கொட்டுதல் நின்று முடியின் வளர்ச்சியை தூண்டும் onion hair oil
வீட்டிலையே செய்யலாம் !
உலகில் உள்ள அனைத்து பெண்களும் பொதுவாக
விரும்புவது , ஆசை படுவது எல்லாமே நீண்ட , அடர்த்தியான ,அழகான கூந்தல் வேண்டும் என்பதே ஆகும். ஆனால் பல பெண்களுக்கு இது மிக பெரிய கனவாகவே இருக்கிறது. இவற்றிற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது , முடி கொட்டுவதை நிறுத்த வேண்டும் , பிறகு முடியின் வளர்ச்சியை தூண்ட வேண்டும் அதற்கான , ஒரு அருமையான இயற்கையான முறை தான் இந்த ஆனியன் ஹேர் ஆயில் இதனை நாம் வீட்டிலையே எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
இந்த ஆனியன் ஹேர் ஆயில் வீட்டிலையே தயார் செய்வதற்கு தேவையான பொருள்களை பார்ப்போம். இதற்கு தேவையானது இரண்டு பொருள்களே ஆகும். அவை
- சின்ன வெங்காயம் or பெரிய வெங்காயம் ( ஒரு கை பிடி )
- தேங்காய் எண்ணெய் ( 1/4 லிட்டர் )
செய்முறை
முதலில் , ஒரு அடி கனமான பாத்திரத்தினை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்கு சூடேற்றிய பின் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டிலையே நன்கு எண்ணெயை சூட்டெற்ற வேண்டும். பிறகு , நாம் எடுத்து வைத்திருந்த வெங்காயத்தை பேஸ்ட் போல அரைத்து அந்த பேஸ்டினை தேங்காய் எண்ணெய்யில் போட்டு மிதமான சூட்டிலையே சூடேற்றவும். வெங்காய பேஸ்ட் முழுவதும் வெந்து பிரவுன் கலர் வரும்வரை மிதமான சூட்டிலையே சூடேற்ற வேண்டும்.
பிறகு, இந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு பின்பு அதனை வடிகட்டி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
முதலில், சிக்கு எதுவும் இல்லாமல் முடியினை நன்கு சீவி கொள்ளவேண்டும். முடியினை ட்ரை யாக வைத்து கொள்ளவேண்டும். பிறகு , நமக்கு தேவையான அளவில் உள்ள எண்ணெயை மட்டும் எடுத்து மிதமாக சூடேற்றி கை பொறுக்கும் சூட்டில் எடுத்து கொள்ளவேண்டும்.
பிறகு, அதனை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் இதனை அரைமணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு சீகைக்காய் அல்லது மைல்டு ஷாம்பூ போட்டு முடியினை அலச வேண்டும்.
இவ்வாறாக , வாரம் இரண்டு முறை செய்தால் முடி கொட்டுதல் குறைந்து முடியின் வளர்ச்சியானது தூண்டப்படும்.
சத்துகள் மற்றும் பயன்பாடுகள்
வெங்காயத்தில் உள்ள சல்பர் முடியின் வேர்க்கால்களை சுத்த படுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் இது முடியை வலிமையாகவும், அடர்த்தியாகவும் ஆகிறது.
மேலும், வெங்காயத்தில் ஆன்டி-இன்ப்பிலாமெடோரி மற்றும் அன்டிமிகிரேபியால் போன்ற சத்துக்களும் உள்ளதால் முடியின் வேர்க்கால்களை சுத்தப்படுத்தி முடியின் வளர்ச்சியை அதிக படுத்துகிறது.
Comments
Post a Comment