முடி கொட்டுதல் முற்றிலும் நின்று முடியின் வளர்ச்சியை இரட்டிப்பாக, இந்த ஒரு காய் போதும் !
இன்று, நாம் பார்க்க இருப்பது , இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும் பிரச்சனைகளான முடி கொட்டுதல் மற்றும் முடி வளர்ச்சி இல்லை மேலும் முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்பு மற்றும் முடியின் நிறம் மாறுவது போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளையும் போக்கும் ஒரு அற்புதமான காய் தான் இன்று நாம் பார்க்க இருப்பது அதுதான்,பீட்ரூட் பேஸ்ட் .
பீட்ரூட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது, அதில் உள்ள சத்துக்கள் என்னென்ன, அவை முடியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுகிறது , மேலும் அவற்றை முடிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்.
செய்முறை
முதலில் ஒரு பீட்ரூட்டினை நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும்.பிறகு அந்த துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளவேண்டும்.பிறகு அந்த கலவையை ஒரு பௌலில் எடுத்து கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் ஷிகக்காய் கலந்து முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவ வேண்டும்.
இந்த, கலவையை முடியின் வேர் கால்களில் இருந்து முடியின் நுனி வரை நன்கு தடவி கொள்ள வேண்டும். பிறகு நாம் விரல்களை வைத்து நன்கு மசாஜ் செய்துகொள்ள வேண்டும்.இவற்றை ஒரு அரைமணி நேரம் அப்படியே விட்டு விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் தலையினை அலசவும்.
பீட்ரூட்டின் நன்மைகள்
பீட்ரூட்டானாது, முடியின் வேர்க்கால்களை சுத்த படுத்தி முடியின் வேர்க்கால்களில் இரத்த ஓட்டத்தினை அதிக படுத்துகிறது.இதனால் ,மிகவும் வலிமையான முடியினை பெற முடியும்.
மேலும், இந்த பீட்ரூட்டில் உள்ள ontioxide முடியில் உள்ள பொடுகு மற்றும் ஸ்கேல்பில் ஏற்படும் அரிப்பு போன்றவற்றில் இருந்து முடியினை பாதுகாத்து முடியினை ஆரோக்கியமாக வளர செய்கிறது.இதனால் முடியின் வளர்ச்சி இயற்கையாக முறையில் தூண்டப்பட்டு முடி கொட்டுதல் குறைகிறது.
மேலும் இந்த பீட்ரூட்டில், carotenoids போன்ற சத்துக்கள் உள்ளதால் முடியின் வேர் பகுதியில் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது.அதனால் முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
இவ்வாறாக , இந்த பீட்ரூட் பேஸ்டை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால், முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குறைந்தது தலைமுடியானது மிகவும் அழகாகவும், இயற்கையாகவும், ஆரோக்கியமாகவும் நன்கு வளரும்.
Comments
Post a Comment