உங்கள் தலைமுடியில் அரிப்பு மற்றும் முடி உதிர்வு உள்ளதா? அப்போ இத follow பண்ணுங்க!
- முடியில் ஏற்படும் வறட்சி தன்மை
- முடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அழுக்கு
- ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள்
- உடலில் ஏற்படும் நீர் சத்து குறைபாடு
- மேலும் முடியின் வேர்க்கால்களில் குறைவான ரெத்த ஓட்டம்.
மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளும் தலைமுடியில் அறிபிணை ஏற்படுத்தி மற்றும் முடி உதிர்வை அதிகமாக ஏற்படுத்திக்கிறது. எனவே, இவற்றை எவ்வாறு தடுப்பது என பார்ப்போம்.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
இந்த பகுதியில் நமக்கு ஏற்படும் அரிப்பினையும் அதனால் ஏற்படும் முடி உதிர்வையும் எவ்வாறு தடுப்பது மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் பார்ப்போம்.
முதலில் முடியின் வேர்க்கால்களில் ஏற்படும் வறச்சி தன்மை நீங்குவதற்க்கு , வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது தலைமுடிக்கு எண்ணெய் குளியல் முறையை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு செய்வதால் முடியில் வறச்சி ஏற்படாமல் தலை முடி எண்ணெய் தன்மையுடனே காணப்படும்.
நமது தலைமுடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அழுக்கு மிகவும் முக்கியமான ஒரு காரணமாக உள்ளது. இதற்கு நாம் தலைமுடியில் அழுக்கு சேராத வகையில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறையாவது தலையினை சீக்காய் கஞ்சி போட்டு அலச வேண்டும். இவ்வாறு செய்வதால் ,தலைமுடி சுத்தமாகி வேர்க்கால்களில் அழுக்குகள் சேராது.

பொதுவாக ஆண்களாக இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீரும், பெண்களாக இருந்தால் ஒரு நாளைக்கு 2.5லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.இவற்றிற்கு குறைவாக தண்ணீர் குடிப்பதால் உடம்பிலே நீர் சத்துகள் குறையும் வாய்ப்புகள் இருக்கும்.

மேலும் , வேர்கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைவதற்கு மிகவும் முக்கியமான காரணம் நமது வேர்க்கால்களில் அழுக்குகள் படிந்து இருப்பதே ஆகும். இவற்றை சரி செய்வதற்கு மிகவும் எளிமையான வழி தேங்காய் எண்ணெயை சூடேற்றி வெதுவெதுப்பாக முடியின் வேர்க்கால்களில் நன்கு தடவி மசாஜ் செய்யவேண்டும்.பிறகு தலையை சீக்காய் போட்டு தலையை அலசி கொள்ளலாம்.
இவ்வாறாக மேற்கூறப்பட்ட அனைத்து எளிமையான வழிமுறைகளையும் பயன்படுத்துங்கள்.இவற்றை தொடர்ந்து செய்து வரும் பொழுது கண்டிப்பாக முடியில் அரிப்பும் ஏற்படாது அதனால் தலைமுடி கொட்டும் பிரச்சனைகளும் வராது .
எனவே ,அனைவரும் இந்த வழிமுறைகளை பயன்படுத்தி, மிகவும் அழகான மற்றும் அடர்த்தியான மேலும் ஆரோக்கியமான கூந்தலை பெறுங்கள்.
Comments
Post a Comment