பட்டு போன்ற அழகான முடி வளர்ச்சிக்கும் , நரை முடி மறைவதற்கும் மருதாணி பவுடர் எவ்வாறு வீட்டிலையே தயார் செய்வது என பார்ப்போம்!
இந்த உலகில் உள்ள அனைத்து பெண்களும் பொதுவாக விரும்புவது, மிகவும் அழகான, நீளமான தலைமுடி வேணும் என்பதே ஆகும்.இதற்காக பல வகையான scientific மருந்துகளை பயன்படுத்தியும் எந்த பலனும் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி , இந்த ஒரு இலையினை பயன்படுத்தி முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய முடியும்.

இப்பொழுது, இந்த மருதாணி பவுடர் வீட்டிலையே எவ்வாறு தயார் செய்வது என்றும், அவற்றை தலை முடிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்ப்போம்.
தயாரிக்கும் முறை
இந்த henna பவுடர் தயார் செய்வதற்கு நமது வீட்டிலையே மருதாணி செடி இருந்தால் மிகவும் நல்லது.முதலில் நமக்கு தேவையான அளவிற்கு மருதாணி இலையை பறித்து நிழலில் காயவைக்க வேண்டும். வெயிலில் காயவைக்காமல் இருப்பது மிகவும் நல்லது.
பிறகு, நன்கு காய்ந்த இலைகளை மிக்ஸியிலோ அல்லது மிஷின் பயன்படுத்தியோ மிகவும் நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.பின்பு இந்த பொடியினை காற்று புகாத ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்கவும்.பிறகு தேவை அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை
முதலில், இந்த henna பவுடர் பல வகையில் முடிக்கு நாம் பயன்படுத்தலாம்.ஆனால் ,இன்று நாம் பார்க்க போவது டீ டிகாஷன் with ஹென்னா ஆகும்.இவற்றை எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம் .
இப்போது, முதலில் ஐந்து ஸ்பூன் ஹென்னா பௌடெரை ஒரு பௌலில் போட்டு கொள்ளவேண்டும்.பிறகு ஒரு தனி பாத்திரத்தில் டீ டிகாஷன் ரெடி செய்து கொள்ள வேண்டும்.பின்பு நன்கு ஆரிய பிறகு ஹென்னாவில் டிகேஷனை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு, இந்த பேஸ்டினை ஒரு நாள் இரவு முழுவதும் விட்டு விட்டு அடுத்த நாள் காலையில் கொஞ்சமாக தயிர் கலந்து தலை முடியின் வேர் பகுதியில் இருந்து நுனி முடி வரை நன்கு அப்ளை செய்து, அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் தலை முடியினை அலசவும்.
பயன்கள்
இந்த மருதாணியில் உள்ள மிகவும் முக்கியமான சத்துகள், முடிக்கு ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி பூஞ்சை போன்று செயல்பட்டு முடியின் வேர்க்கால்களை சுத்த படுத்துகிறது.மேலும் இது பொடுகு போன்ற பிரச்சனைகள் வரமால் தடுக்கிறது.
மேலும் ,இந்த ஹென்னா ஒரு இயற்கை dye போன்று செயல்பட்டு நரை முடி பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
இது முடியினை மிகவும் பொலிவாக்குகிறது .மேலும், இது முடி கொட்டுதலை குறைத்து முடியின் வளர்ச்சியை அதிக படுத்துகிறது.
எனவே, அனைவரும் இந்த ஹேர் பேக்கினை வாரம் மூன்று பயன்படுத்தி தலைமுடி பிரச்சனைகளை சரி செய்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment