தலைமுடி மூன்று மடங்கு அதிகமாக வளர்வதற்கு இந்த ஒரு ஹேர் பேக் கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க ! ( rice kanji for hair growth))
தலைமுடி மூன்று மடங்கு அதிகமாக வளர்வதற்கு இந்த ஒரு ஹேர் பேக் கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க !

பெண்கள் அனைவரும் விரும்புவதும்,அனைவரும் ஆசைப்படுவதும் மிக அழகான, அருமையான,பொலிவான கூந்தல் வேண்டும் ஆகும்.இதற்காக நாம் இயற்கையான முறையில் நாம் முன்னோர்கள்கள் பயன்படுத்திய அற்புதமான வழிமுறைகளை பயன்படுத்துவதே நாம் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
இதற்காக ,இன்று நாம் பார்க்க இருப்பது மிகவும் ஆரோக்கியம் நிறைந்த ஒரு ஹேர் பேக் ஆகும்.இது அரிசி கஞ்சி மற்றும் ஷிகக்காய் கலந்த ஒரு பேஸ்ட் ஆகும்.
தயாரிக்கும் முறை
முதலில் அரிசி சாதம் வடிச்ச கஞ்சியினை எடுத்துக்கொள்ள வேண்டும்.அதுவும் முதல் நாள் வடிச்ச கஞ்சி என்றால் மிகவும் நல்லது.
இந்த கஞ்சியில், நாம் இயற்கையான முறையில் தயார் செய்த ஷிகக்காய் அல்லது கடைகளில் கிடைக்கும் ஷிகக்காய் எதுவாக இருந்தாலும் அதை பயன்படுத்தி கொள்ளலாம்.
இப்பொழுது , இந்த கஞ்சியில் நான்கு ஸ்பூன் ஷிகாக்கையினை போட்டு நன்கு கலந்து கொள்ளவேண்டும்.இந்த கலவையை கெட்டியாகவே கலந்து கொள்ளவேண்டும்.பிறகு இதனை முடியின் வேர்க்கால்களில் படும்படி தடவி கொள்ளவேண்டும்.
பயன்படுத்தும் முறை
முதலில் முடியினை இரண்டு பகுதிகளாக பிரித்து கொள்ள வேண்டும். பிறகு தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி முடி வரை நன்கு இந்த பேஸ்டினை தடவி கொள்ளவேண்டும்.

பிறகு, இதை அரைமணி நேரம் அப்படியே விட்டு விட்டு, ஷாம்பு ஏதும் பயன்படுத்தாமல் ,மிதமான சூட்டில் உள்ள தண்ணீரினால் தலைமுடியினை அலச வேண்டும்.
பயன்கள்
இந்த அரிசி காஞ்சியில் மிகுந்த அளவில் ஸ்டார்ச் சத்துக்கள் உள்ளதால் இது முடியினை மிகவும் மெருதுவாக்குகிறது.மேலும் பட்டு போன்று மின்ன செய்கிறது.முடியின் பொலிவு தன்மையை அதிக படுத்துகிறது.

இந்த அரிசி காஞ்சியில் அசிடிக் அதிக அளவில் உள்ளதால், இது முடியின் உள்ள pH அளவை சீர்படுத்துகிறது.மேலும் இதில் அதிக அளவில் விடமின்ஸ் அண்ட் nuetriants லெவல் உள்ளதால் முடியின் வளர்ச்சியை வேரிலிருந்தே வலிமையாக்குகிறது.

.
எனவே, இந்த அரிசி காஞ்சி பேஸ்டை அனைவரும் தலைமுடிக்கு பயன்படுத்தி பயனடையவும்.
Comments
Post a Comment