வலிமையான முடி வளர்ச்சிக்கு முருங்கை கீரை soup போதும் ( drumstrick leaves soup for hair growth ),hair growth

வலிமையான முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு இலையின்  soup போதும்! கண்டிப்பா, இதை ட்ரை பண்ணுங்க !




                              பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலார்க்கும்  ஏற்படும் முடி உதிர்விற்கு மிகவும் முக்கியமான ஒரு காரணம் என்னவென்றால் உடம்பில் ஏற்படும் இரும்பு சத்துக்களின் குறைபாடுகளே ஆகும்.இன்றைய அவசர காலகட்டத்தில் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் சரியான நேரத்திற்கு உணவு உண்ணுவதில்லை.மேலும் மிகவும் தவறான உணவு பழக்கங்களை பின்பற்றுவதும் இந்த முடி உதிர்விற்கு முக்கியமான காரணம் ஆகும்.


 
                              இந்த இரும்பு சத்துக்களின் குறைபாட்டிற்கு மிகவும் அருமையான, மிகவும் எளிமையான , மிகவும் சத்துமிக்க, இரும்பு சத்துகள் அதிகமாக இருக்கும் ஒரே ஒரு இலையின் soup பற்றி இன்று நாம் பார்க்க போகிறோம். அவை முருங்கை கீரையின் சூப் ஆகும்.

தேவையான பொருள்கள் 




                          இந்த முருங்கை கீரை சூப்பினை தயார் செய்வதற்கு தேவையான பொருள்கள்,

  • முருங்கை கீரை 
  • பூண்டு 
  • தண்ணீர் 
  • சீரகம்.
  • உப்பு 
  • மிளகு 
இந்த பொருட்களை பயன்படுத்தியே மிகவும் அதிகமான எறும்பு சத்துகள் நிறைந்த சூப்பினை தயார் செய்ய போகிறோம்.

தயாரிக்கும் முறை 

                        இந்த முருங்கை கீரை சூப் தயாரிப்பதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு , அதில் சுத்தம் செய்த இரண்டு கை பிடி அளவுள்ள முருங்கை இலையினை போட்டு ,நன்கு கொதிக்க விடவும்.



                      பிறகு , அதில் உப்பு சேர்க்க வேண்டும். பின்பு அதில் பூண்டு,சீரகம்,மிளகு இவை மூன்றையும் நன்கு இடித்து அதில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.


                      நன்கு கொதித்து வந்த உடன் நன்கு ஆறவிட்டு வேண்டும். பிறகு அதை வாடி கட்டி அந்த சூப்பினை குடிக்க வேண்டும். மேலும் இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


.
                      இவற்றை ,தொடர்ந்து குடித்து வரும் போது உடம்பில் இரும்பு சத்துக்கள் மிகவும் அதிகமாக தொடங்கும்,அதனால் , முடி கொட்டுவது குறைந்து தலை முடி நன்கு அடர்த்தியாக வளரும்.

முருங்கை கீரை சூப் பயன்கள் 

                     இந்த முருங்கை கீரையில் அதிக அளவில் இரும்பு சத்துகள் உள்ளன, இதனால் முடியின் வேர்க்கால்களில் உள்ள ரத்தத்தின் ஓட்டத்தை சீர்படுத்துகிறது .இதனால் முடியின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் வளரும்.


                      மேலும் , இந்த முருங்கை கீரையில் ,உள்ள சத்துக்களானது மற்ற கீரைகளில் உள்ள சத்துக்களை விட மிக அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் மற்றும் புரத சத்துக்களும் அதிகமாக உள்ளது.


                      இந்த சத்துக்களினால் தலை முடி கொட்டுவது முற்றிலுமாக குறைந்து ,முடி மிகவும் ஆரோக்கியமாக ,அழகாக,மிகவும் பொலிவாகவும் ,வலிமையாகவும் வளரும். எனவே,கண்டிப்பாக அனைவரும் இந்த அருமையான சூப் பருகி தலை முடி பிரச்சனைகளை சரி செய்து கொள்ளுங்கள். 
                           



Comments