உங்கள் தலை முடிக்கு ஒரே ஒரு முறை இந்த பேஸ்ட் ட்ரை பண்ணுங்கள்! amla with habiscus paste for hair growth

உங்கள் தலை முடிக்கு ஒரே ஒரு முறை இந்த பேஸ்ட் ட்ரை பண்ணுங்கள்! உங்கள் தலை முடி supera வளரும் ! 


                          இன்றைய, காலகட்டத்தில் உள்ள அனைவர்க்கும் ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சனை முடி கொட்டுதல் மற்றும் முடி வளர்ச்சியே சுத்தமாக இல்லை என்பதேயாகும். இதற்கான முக்கியமான காரணம் நாம் பழங்காலத்து உணவு முறைகளை முற்றிலுமாக மறந்து விட்டதே ஆகும்.பொதுவாக நமது முன்னோர்களின் வழிகாட்டுதலை நாம் பின்பற்றி வந்தாலே நமக்கு பாதி பிரச்சனைகள் வராது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது கூட ஆயுர்வேதமும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு இயற்கையான பேஸ்ட் தலைமுடிக்கு எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருள்கள் 


                                      இந்த பேஸ்ட் தயாரிப்பதற்கு தேவையானது, சாதாரணமாக நாம் பயன்படுத்தப்படும் பொருள்களே ஆகும். அவை,

  • செம்பருத்தி பொடி 
  • நெல்லிக்காய் பொடி 
  • தயிர் 
                                       மேற்கூறப்பட்ட பொருள்களே இந்த பேஸ்ட் தயாரிக்க தேவையானவை . இனி இவற்றை எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம்.

செய்முறை 

                                       இப்பொழுது, செம்பருத்தி பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியானது ரெடிமேட் பொடியாக அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது.அல்லது நாம் வீட்டிலையே தயார் செய்து கொள்ளலாம். முதலில் ஒரு பௌலில் இரண்டு ஸ்பூன் செம்பருத்தி பொடியினை போட்டு கொள்ளவேண்டும்.


                              

                                       பிறகு, அதனுடன் இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியினையும் போட்டு, பிறகு அதனுடன் மூன்று ஸ்பூன் அளவிற்கு தயிரினை போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவேண்டும்.புளித்த தயிராக இருந்தால் மிகவும் நல்லது.இப்பொழுது இந்த மூன்றினையும் நன்கு மிக்ஸ் செய்து ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.


                                       பிறகு, இந்த பேஸ்டினை சிறிது சிறிதாக எடுத்து முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனி வரை நன்கு தடவி கொள்ளவேண்டும். அப்படியே தடவி முடிக்கு மசாஜ் கொடுக்க வேண்டும்.இவ்வாறு முடியின் அனைத்து பகுதியிலும் படும்படி தலை முழுவதும் நன்கு தடவி கொள்ளவேண்டும். பிறகு இதனை ஒரு அரைமணி நேரம் அப்படியே விட்டு விட்டு சீக்காய் கொண்டு முடியினை நன்கு அலச வேண்டும்.                          



                                      இவ்வாறாக, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் முடி கொட்டுதல் முற்றிலுமாக நின்று முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக வளரும்.முடியின் வளர்ச்சி இரண்டு மடங்காக அடர்த்தியாக நன்கு வளரும்.

பயன்கள் 

                                   இந்த செம்பருத்தி பொடியில் இயற்கையாகவே ஆயில் தன்மையை முடிக்கு கொடுக்கிறது. இதனால், இது முடியின் வேர்க்கால்களை வலுமையாக்குகிறது.மேலும், இதில் அமினோஅசீட்ஸ் உள்ளதால், முடினை வேரில் இருந்தே வலிமையாக வளர செய்கிறது.


                                   இந்த செம்பருத்தி பொடியானது முடி கொட்டிய இடத்தில் புதிய முடியினை வளர செய்கிறது.இந்த பொடியில் ரிச் கேரட்டின் உள்ளதால் முடியில் ஏற்படும் வெடிப்புகளையும் சரி செய்கிறது.மேலும் அனைத்து விதமான முடி பிரச்சனைகளும் சரி செய்கிறது. 
                                 மேலும் நெல்லிக்காய் பொடியில் பிடோனுற்றியென்ட் மற்றும் விடமின்ஸ் மற்றும் பலவிதமான மினெரல்ஸ் போன்றவை அதிக அளவில் உள்ளன.அதனால் இது வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தினை அதிக படுத்துகிறது. இதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
                                  

Comments