இஞ்சியை உங்கள் முடிக்கு இவ்வாறு பயன்படுத்துங்கள் ! தலை முடி மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்

இஞ்சியை உங்கள் முடிக்கு இவ்வாறு பயன்படுத்துங்கள் ! தலை முடி மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்

                         உங்களுக்கு இருக்கும் தலைமுடி சம்மந்த பட்ட அனைத்து பிரச்சனைகள் மற்றும் தலையில் இருக்கும் பேன் தொல்லை, ஈறு தொல்லை, பொடுகு தொல்லை மற்றும் தலையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு அருமையான ஆயுர்வேதிக் மருத்துவ முறை ஓன்று இருக்கிறது. இந்த முறை நம் முன்னோர்கள் அனைவரும் பயன்படுத்திய முறைகளில் ஓன்று ஆகும்.

                                     இந்த இஞ்சியில் இல்லாத மருத்துவ பயன்களே  இல்லை.எனவே இவற்றை பயன்படுத்தி தலைமுடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். இங்கு இன்று நாம் பார்க்க போவது ஆயுர்வேதிக் மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி ஹேர் ஆயில் ஆகும்.

தேவையான பொருள்கள் 

                                    இந்த அற்புதமான இஞ்சி ஹேர் ஆயில் செய்வதற்கு முக்கியமாக தேவைப்படுவது இரண்டு பொருள்களே ஆகும். இந்த எண்ணெயை மிகவும் எளிமையான முறையில் தயாரிக்க முடியும்.நம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களே இதற்கு போதுமானது.  அவை,


  • இஞ்சி துண்டுகள் 
  • தேங்காய் எண்ணெய் 
                                   இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி இஞ்சி எண்ணெயை தயாரிக்க வேண்டும். இந்த எண்ணெயை நாம் ஆயுர்வேதிக் மருத்துவ முறைகளில் ஒன்றாகும்.இன்றைய காலகட்டத்தில் மறந்துபோன இந்த மருத்துவ முறையை நாம் இன்று செய்ய போகிறோம்.எனவே, இவற்றை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

செய்முறை 

                                   முதலில் நன்கு விளைந்த இஞ்சியை சுத்தமாக மண் ஏதும் இல்லாதவாறு நன்கு கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதன் தோலினை சீவி விட வேண்டும். பிறகு அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் ஈரம் எதும் இல்லாதவாறு  ஒரு cotton துணியில் நன்கு துடைத்துக்கொள்ள வேண்டும்.


                                     இப்போது, ஒரு அடிகனமான பத்திரத்தினை நன்கு சூடேற்றி அதில் 1/2 லி தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்கு சூடேற்ற வேண்டும். பிறகு அதில் நாம் வெட்டி வைத்திருக்கும் இஞ்சி துண்டுகளையும் போட்டு,இஞ்சியின் சலசலப்பு குறை யும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.இவற்றை இரவில் செய்வது மிகவும் நல்லது.


                                     ஏனென்றால், இந்த எண்ணெயை ஒருநாள் இரவு முழுவது அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு மறுநாள் காலையில் வடிகட்டி அதை பயன்படுத்தி கொள்ளலாம். நம் வீட்டிலையே சுத்தமான ஆரோக்கியமான இஞ்சி எண்ணெய் தயார் ஆகிவிட்டது.

பயன்படுத்தும் முறை 



                                       இந்த எண்ணெயை விரல்களில் எடுத்து கொண்டு தலைமுடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனி வரை நன்கு தடவி மசாஜ் கொடுக்க வேண்டும். பிறகு அரைமணி நேரம் அப்படியே விட்டு விட்டு பிறகு மைல்டு ஷாம்பூ போட்டு தலை முடியினை அலசவும்.இவ்வாறாக, வாரம் மூன்று முறை குளித்தால் தலைமுடி சம்மந்தமான எந்த பிரச்சனைகளும் வராது.

பயன்கள் 

                                    இஞ்சியில் இருக்கும் மினெரல்ஸ் தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தினை சீர்படுத்துகிறது. இதனால், முடிகள் கொட்டிய இடத்தில் புது முடியினை வளர செய்கிறது. அதனால் இந்த எண்ணெய் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.



                                    மேலும் இஞ்சியில் உள்ள  fatty ஆசிட் முடியின் வேர்க்கால்களை வலுமையாகிறது. இதனால் முடி வளரும் போதே வேரிலிருந்தே வலிமையான முடியாக வளருகிறது. எனவே முடி வேகமாக வளருகிறது.


                                     எனவே, இந்த ஆயுர்வேதிக் மருத்துவ குணம் நிறைந்த இந்த இஞ்சி எண்ணையை பயன்படுத்தி தலைமுடி சம்மந்த பட்ட பிரச்சனைகளையும் மற்றும் முடியின் வளர்ச்சிகளையும் அதிக படுத்தி பயன்பெறுங்கள்.
                                               

Comments